மீண்டும் இணையும் கூட்டணி..

01.04.2023 21:23:21

இயக்குனர் மணிகண்டன் தற்போது புதிய வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை', 'கடைசி விவசாயி' போன்ற படங்கள் மூலம் ரசிகர் மத்தியில் இடம் பிடித்தவர்

இயக்குனர் எம். மணிகண்டன். இவர் தற்போது புதிய வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


7c's என்டர்டெயின்மென்ட் சார்பாக பி. ஆறுமுக குமார் தயாரிக்கும் இந்த வெப் தொடருக்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு நேற்று மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் எளிமையான பூஜையுடன் துவங்கியது. கடைசி விவசாயி படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி -மணிகண்டன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்த வெப்தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும், இந்த வெப்தொடர் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.