விஜயின் அரசியல் நிலவரம் பற்றி விசாரித்த ரஜினி

26.03.2024 00:25:12

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

 

இப்படத்தில் அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

 

இப்படத்தில் ஷூட்டிங் கேரளாவில் நடந்து வரும் நிலையில், வேட்டையன் பட ஷூட்டிற்காக கேரளா சென்றபோது  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கிய அதே ஓட்டலில் விஜயும் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

 

படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில் கேரளா ரசிகர்களையும் விஜய் சந்தித்து வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை சந்தித்துள்ளதாக் ரசிகர்கள் அவருடன் புகைப்படம், செல்ஃபி ,வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளதால் தன் கட்சி நிர்வாகிகளையும், ரசிகர்களை தயார்படுத்தி வருகிறார். சமீபத்தில் தன் கட்சி ஆப் மூலம் உறுப்பினர்களை சேர்த்தார்.
 

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல பத்திரிகையாளரிடம் நடிகர் விஜயின் அரசியல் நிலவரம், அவருக்கு அனைத்து தொகுதிகளிலும் செல்வாக்கு  உள்ளதா? அவர் 2026 தேர்தலில் ஜெயிக்க வாய்ப்புள்ளதா? என்பதைப் பற்றி எல்லாம் விசாரித்ததாக தகவல் வெளியாகிறது.
 

ஏற்கனவே கமல்ஹாசன் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது இதேமாதிரி கேட்டு தெரிந்துகொண்டதாக கூறப்படுகிறது.
 

மேலும், விஜய்யின் கட்சி தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என ரஜினி விரும்பியதாக கூறப்படுகிறது.