அடுத்த இரண்டு படம் லைக்காவிற்கு தான்.. உறுதி செய்த ரஜினி..

28.10.2022 16:16:16

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பாக லைக்கா நிறுவனம் தலைவர் சுபாஷ்கரன், தமிழ் குமரன், பிரேம் சிவசாமி ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர். இப்படங்களின் பூஜை வரும் நவம்பர் 5-ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது. லைக்கா நிறுவனர்களுடன் ரஜினி இந்த இரண்டு படங்களில் ஒன்றை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும் மற்றொன்றை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமியும் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.