காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு - அமைச்சர் டக்ளஸ் உறுதி
20.03.2021 09:43:19
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் வகையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது காணாமல் போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.