கைது பயம்.

26.09.2025 07:52:05

கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக, நெதன்யாகுவின் விமானம் புதிய வழித்தடத்தில் பறந்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்ற நியூயார்க் செல்லும்போது, அவரது அரசு விமானமான Wings of Zion, வழக்கமான ஐரோப்பிய வான்வழி பாதையை தவிர்த்து, ஒரு சிக்கலான வழித்தடத்தை தேர்ந்தெடுத்தது.

இந்த மாற்றம்,2024-ல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அவருக்கும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான யோவாவ் கலாண்ட்டுக்கும் () எதிராக போர் குற்றசாட்டுகள் தொடர்பாக வழங்கிய கைது உத்தரவை தவிர்க்கும் முயற்சியாக கூறப்படுகிறது.

அவரது விமானம் ஐரோப்பிய நாடுகளின் வான்பாதைகளைத் தவிர்த்து, கிரீஸ் மற்றும் இத்தாலியின் எல்லைகளை மட்டும் கடந்து, மத்தியதரைக் கடல் வழியாக அட்லாண்டிக் கடலை கடந்தது.

இது வழக்கமான தூரத்தை விட 600 கி.மீ. அதிகமாக பயணிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ICC உறுப்பினர் நாடுகள், நெதன்யாகுவை தங்கள் நாட்டிற்கு வந்தால் கைது செய்வதாக அறிவித்துள்ளன.

அயர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் கைது உத்தரவை செயல்படுத்த தயார் என தெரிவித்துள்ளன. ஆனால் பிரான்ஸ், கைது செய்ய மாட்டோம் என்றும், இத்தாலி, அது நடைமுறையில் சாத்தியமா என சந்தேகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரான்சின் வான்வழியை பயன்படுத்த அனுமதி கேட்டதாக Times of Israel தெரிவித்துள்ளது. அனுமதி வழங்கப்படும், இஸ்ரேல் அதை பயன்படுத்தவில்லை என பிரான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நெதன்யாகு, வெள்ளிக்கிழமை (செப் 26) UNGA-வில் உரையாற்ற உள்ளார். அதன்பின் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திக்க அவர் வாஷிங்டனுக்கு செல்லவுள்ளார்.