சபாநாயகர் மஹிந்த யாப்பாவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

04.02.2024 13:28:59

உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த விடயங்களில் 9 விடயங்கள் உள்ளீர்க்கப்படாது இணையப் பாதுகாப்புச் சட்டம் அமுல்படுத்திய  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தின் உள்ளடக்கம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்,

குறித்த சட்டம்  வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் உள்ளடக்கத்தையும் உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த விடயங்களையும் ஒப்பிட்ட போது 9 விடயங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்றம் சட்டமூலமொன்று தொடர்பில் பரிந்துரைகளை வழங்குகின்ற போது அதனை உள்ளீர்த்தே சட்டமூலம், சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே உயர் நீதிமன்றத்தின் 9 பரிந்துரைகளை புறந்தள்ளி சபாநாயகர் இணையப் பாதுகாப்புச் சட்டத்தினை சன்றுரை வழங்கிய செயற்பாட்டிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.