யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

27.01.2021 15:59:38

யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 15 பேர் நடுநிலை வகித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலிருந்த யாழ் மாநகரசபையை வி.மணிவண்ணன் தரப்பினர் கைப்பற்றிய பின்னர் முதலாவது வரவு செலவு திட்டம்  சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக மக்களிற்கு காட்சிப் படுத்தவில்லை என்ற பல காரணங்களை குறிப்பிட்டு கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன எதிர்ப்பு தெரிவித்தபோதும் ஈ.பி.டி.பி. பலமான ஆதரவை வழங்கியது.

45 உறுப்பினர்களை கொண்ட யாழ்ப்பாணம் மாநகரசபையில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் நடுநிலை வகித்தனர்.

அத்தோடு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 உறுப்பினர்கள் எதிராகவும் 10 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.