ஆஸ்திரேலியாவில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
07.11.2021 14:54:06
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், 16 வயதுக்கு மேற்பட்ட 80 சதவீதம் பேருக்கு, தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'இது ஒரு அற்புதமான சாதனை. அனைவரின் கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமானது' என, குறிப்பிட்டுள்ளார்.