கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து தொடர்ந்து ஸ்தம்பிதம்

13.11.2021 06:33:28

கொழும்பு – கண்டி வீதியில் 98 ஆவது கிலோ மீற்றர் ‘கீழ் கடுகண்ணாவ வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இந் நிலையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் களப்பரிசோதனை செய்து வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி வீதியின் 98 ஆவது கிலோமீற்றர் பகுதியில் ‘கீழ் கடுகன்னாவ’ பகுதி மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.