காதல் குறித்து மறுப்பு தெரிவித்த சமந்தா
நடிகை சமந்தா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தனது முன்னாள் கணவர் நாகசைதன்யா காதல் குறித்து விமர்சித்துள்ளாதக செய்தி வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். கணவருடன் சமந்தா ஐதராபாத்தில் குடியேறி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். திருமண முறிவுக்கான காரணத்தை இதுவரை இருவரும் வெளியிடவில்லை.
சமந்தா -நாகசைதன்யா இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். சமீபகாலமாகவே நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் அண்மையில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாகசைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்படட்டதாகவும் அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகை சமந்தா, "யார் யாருடன் உறவில் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது" என நாகசைதன்யா -சோபிதா துலிபாலா உறவு குறித்து கூறியதாக தனியார் பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா 'தான் இவ்வாறு கூறவில்லை' என்று மறுத்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவிற்கு ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.