முக்கிய வணிகப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் தாலிபான்
09.08.2021 08:52:04
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்கள் பயங்கரவாதிகளால் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் குன்டுஸ் என்கிற முக்கிய வணிகப் பகுதியில் தாக்குதல் நடந்தது. கடந்த சில நாட்களில் தாலிபான்கள இரண்டு முக்கிய வணிக பகுதிகளை கையகப்படுத்தி இருந்தனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குன்டுஸ் பகுதியைக் கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டது. இங்கிருந்த வெளிநாட்டுப் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறியதை அடுத்து தாலிபான் இந்த திட்டத்தை தீட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.