டான் !

25.05.2022 17:35:03

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலமாக வளர்ந்து வருகிறார். ஒவ்வொரு படத்தையும் தெளிவாக தேர்வு செய்து நடிக்கிறார்.

கடந்த வருடம் டாக்டர் பட வெற்றியை கொடுத்த சிவகார்த்திகேயன் இந்த வருடம் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படம் கடந்த மே 13ம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

படம் ரிலீஸ் ஆகி 11 நாட்கள் ஆன நிலையில் படமும் ரூ. 100 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துவிட்டதாக இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனமே தெரிவித்துவிட்டார்கள்

இதனால் சிவகார்த்திகேயன் படு குஷியில் 100கோடி டான் என பல டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகிறார்கள்.

இப்படி வருடா வருடம் செம ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, சுமார் ரூ. 80 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.