உக்ரைனிய தலைநகர் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 9 பேர் படுகாயம்!
14.11.2025 14:37:09
உக்ரைனிய தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் பாரிய தாக்குதல்களில் , குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீவ் மேயர் வித்தாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த தாக்குதலில் மருத்துவமனை வசதிகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் உட்பட பல மாவட்டங்களில் தீ விபத்துக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட மின்சாரத் தடைகள் சரிசெய்யப்பட்டாலும், வெப்பமூட்டும் வசதிகளில் தடைகள் இன்னும் நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மேயர் மருத்துவர்களும் அவசரகால சேவைகளும் எல்லா இடங்களிலும் செயல்படுவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.