குஜராத் முதல் மேகாலயா வரை ராகுல் 2-ம் கட்ட நடைபயணம்: காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பாடு

09.08.2023 08:49:42

கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை ஸ்ரீநகரில் முடிவடைந்தது. நடைப்பயண தேதி, செல்லும் இடம் போன்ற விவரங்கள் வெளியிடவில்லை. மும்பை: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி முதல் ஜனவரி 30-ந்தேதி வரை அவர் நடைபயணத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை ஸ்ரீநகரில் முடிவடைந்தது. அவர் 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களில், மொத்தம் 3970 கிலோமீட்டர் தூரம் நடை பயணம் செய்தார். 130 தினங்களுக்கு மேலாக அவர் பாதயாத்திரை சென்றார். இந்நிலையில் ராகுல் காந்தி 2-வது கட்டமாக பாதயாத்திரை மேற்கொள்கிறார். அவரது 2-வது கட்ட நடைபயண விவரத்தை மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தியின் பாதயாத்திரை குஜராத்தில் தொடங்குகிறது.வடக்கு கிழக்கு மாநிலமான மேகாலயாவில் நடைபயணம் நிறைவடைகிறது. நடைப்பயண தேதி, செல்லும் இடம் போன்ற விவரங்கள் வெளியிடவில்லை. பாதயாத்திரைக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள்.