
நயனை ஒரங்கட்டிய சாய் பல்லவி.
நடிகை சாய் பல்லவி இன்றைய தினம் தன்னுடைய 33 வயது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த தினத்தை முன்னிட்டு அவரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் இந்தியாவில் கோயம்பத்தூரை பிறப்பிடமாக கொண்டவர். |
மேலும் பிரபல டிவியில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மீடியாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து “பிரேமம்” திரைப்படத்தில் மலர் ரீச்சராக சினிமாவிற்குள் அறிமுகமானார். தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பு, நலினம் கொண்ட நடனம் இப்படி இளைஞர்களின் மனதை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். சினிமாவில் கவர்ச்சி காட்டி பிரபலமாகும் நடிகைகளுக்கு மத்தியில் தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டும் நடிகையாக சாய் பல்லவி ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார். இந்த நிலையில் சாய் பல்லவி சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதன்படி, சாய் பல்லவியிடம் ரூ.47 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. இவர், ஒரு படத்திற்கு ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம், வாங்கும் நடிகையாகவும் சாய் பல்லவி வலம் வருகிறார். மருத்துவம் படித்த சாய் பல்லவி, படித்து முடித்ததும் சினிமாவில் நாயகியாக களமிறங்கி நடித்து வருகிறார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. |