வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்தவர் ஜனாதிபதி ரணில்!
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்“ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறங்குவார்.
தேசிய வேட்பாளராக பொது வேட்பாளராக தேசிய கொள்கைகளுடனான வேட்பாளராகவே அவர் களமிறங்குவார்.எனவே கட்சி ரீதியாகவும் தனிநபராகவும் அமைப்புக்கள் சார்பாகவும் ஒத்துழைப்பு வழங்கமுடியும்.
ஏனென்றால் நாட்டின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து சிறந்த கொள்கை திட்டங்களுடனேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்குவார். வங்குரோத்து நிலையில் இருந்து ஒன்றரை வருடகாலத்திற்குள் நாட்டை மீட்டெடுத்தவர் ரணில் விக்ரமசிங்க. அவரால்தான் நாட்டை கட்டியெழுப்பமுடியும் என்பதை மக்களும் அறிவர்” இவ்வாறு மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.