விடாமுயற்சி படத்திற்காக 10 கிலோ வரை உடல் எடை குறைத்த அஜித் !
நடிகர் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்ட இந்தப்படத்தின் சூட்டிங் தொடர்ந்து அசர்பைஜானில் நடத்தப்பட்டது. இதற்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு முகாமிட்டிருந்தனர். அங்கு கார் சேஸிங் காட்சிகள், ஆக்ஷன் மற்றும் பாடல் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டன. படத்தின் 90 சதவிகித சூட்டிங் அங்கு திட்டமிடப்பட்டது.
இந்தப் படத்திற்காக குண்டாக இருந்த தன்னுடைய உடல்வாகை தற்போது அதிரடியாக குறைத்துள்ளார் அஜித். சமீபமாக தன்னுடைய ரசிகர்களுடன் இணைந்து அவர் எடுத்துவரும் புகைப்படங்கள் மற்றும் சென்னை திரும்பியபோது விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ போன்றவை சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களில் இருந்ததை போல இல்லாமல் இந்தப் புகைப்படங்களில் அஜித் எடை குறைத்து காணப்படுகிறார்.