3,000 மாணவர்களுக்கு அடித்தது அதிஷ்டம்
க.பொ.த சா/த பரீட்சையில் சித்தியடைந்த 100 கல்வி வலயங்களைச் சேர்ந்த 3,000 மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தின் உதவித்தொகை திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சதாரண தர பரீட்சையில் தோற்றி முதல்
அமர்விலேயே சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவ மாணவியருக்கான
புலமைப்பரிசில் வழங்கல் – 2023 நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவின் தலைமையில் புதன்கிழமை (03) நடைபெற்றது.
புலமைபரிசில் வழங்களின் அடையாள ரீதியாக மேல்மாகாணத்தின் 11 கல்வி வலயங்களில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 110 மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் புலைமைப்பிரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் கீழ் புலமைப் பரிசில்களைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு க.பொ.த உயர்தரத்திற்கு
தகுதிபெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியை நிறைவு செய்யும் இரு வருட காலப்பகுதிக்கு
மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளதோடு அதற்காக 360 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.