SJB எம்.பி.க்கள் வெளிநடப்பு.
17.06.2025 08:46:16
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சர்வாதிகார முறையில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
"மிகவும் தீவிரமாகி வரும் மத்திய கிழக்கு நெருக்கடி குறித்து கேள்வி எழுப்ப எங்களுக்கு அனுமதி இல்லாததால் நாங்கள் வெளிநடப்பு செய்ய முடிவு செய்தோம்," என்று எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
"இந்த நெருக்கடி இலங்கையை பெரிதும் பாதிக்கும், மேலும் நாங்கள் கேள்வி எழுப்புவதைத் தடுத்தது நியாயமற்றது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்க மற்றும் சாணக்கியன் ராசமாணிக்கம் ஆகியோரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.