படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தல்

02.08.2023 13:24:08

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (01) நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் போது நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். பல்கலைகழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி அவரது வீட்டில் அதிகாலை 5 மணியளவில் ஆயுதாரிகளால் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப் படுகொலை செய்தனர்.