நயன்தாராவுக்கு 60 அடி கட்அவுட்.

25.10.2026 14:50:17

நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து இருக்கிறார். தீபாவளி ஸ்பெஷல் அந்த படம் திரைக்கு வருகிறது. தற்போது அந்த படத்தின் புரோமோஷனுக்காக 60 அடி கட் அவுட் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கட் அவுட் பற்றி நடிகை ரெஜினா கசன்ரா x தளத்தில் வியந்து பதிவிட்டு இருக்கிறார். இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்படும் முதல் நடிகை நயன்தாரா தான் என என்னிடம் சொன்னார்கள். அதை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், எனக்கு வியப்பாக இருக்கிறது என ரெஜினா கசன்ரா தெரிவித்து உள்ளார்.