மூன்று தீவுகளையும் கைப்பற்றும் நோக்கமா ?

13.12.2021 16:11:42

 

இலங்கைக்கான சீன குடியரசின் தூதுவர் கீ சென்ஹொங் (Kei Senhong) வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விஜயத்தின் போது அவர் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இருநாள்கள் தங்கியிருப்பார் என சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்போது வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.

இத்துடன் கடற்றொழிலாளர்களுக்கான ஒருதொகுதி உபகரணங்களை வழங்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது