ஆந்திரோபிக் சிஇஓ அதிர்ச்சி தகவல்.
தொழில்நுட்ப உலகில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துவிடுமோ என்ற அச்சம் பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில், Anthropic நிறுவனத்தின் சிஇஓ டாரியோ ஆமோடே வெளியிட்டுள்ள கருத்து பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், அலுவலகம் சார்ந்த ஆரம்ப நிலை வேலைகளில் சுமார் 50 சதவீத பணிகளை AI தொழில்நுட்பமே கையாளும் என்று அவர் கணித்துள்ளார்.
மனிதர்களின் சிந்தனை திறனுக்கு இணையாக AI மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், கோடிங் முதல் தரவுப் பகுப்பாய்வு வரை பல துறைகளில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் சில வேலைகளை முடக்கினாலும், AI சார்ந்த புதிய வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்த தொழில்நுட்பப் புரட்சி பணியாளர்களின் திறனை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கால வேலைவாய்ப்பு சந்தையில் ஏஐ-யுடன் இணைந்து செயல்படுபவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.