இந்தியாவின் ஆதரவை ஐநா தீர்மானத்திற்கு பெறும் முயற்சியில் பிரிட்டன்
17.03.2021 10:15:52
இலங்கை குறித்து ஐக்கிநாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்ட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளை பிரிட்டன் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டனின் அமைச்சர் தாரிக் அஹமட் இந்த விடயம் குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாரிக் அஹமட் இந்திய வெளிவிவகார அமைச்சரையும் செயலாளரையும சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை விவகாரம் குறித்தும் ஆராயப்பட்டதாக எதிர்பார்க்கப்படுகின்றது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன