சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திட்டம்..!
20.08.2021 10:43:30
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. திங்கட்கிழமை கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர இருப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜெயலலிதா தங்கக்கூடிய கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் மர்மமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.