‘பிரேக்கிங் பேட்’ நடிகர் ஆர்.ஜே. மிட் காலமானார்!
உலகளாவிய ரீதியில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரான ‘பிரேக்கிங் பேட்’ மூலம் பிரபலமான நடிகர் ஆர்.ஜே. மிட் (34) காலமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது மறைவு ஹொலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவரது மரணம் தொடர்பான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
‘பிரேக்கிங் பேட்’ தொடரில் வொல்டர் ஒயிட் ஜூனியர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அவர் புகழ்பெற்றார். பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞராக அந்தத் தொடரில் நடித்திருந்த அவர், நிஜ வாழ்க்கையிலும் அதே பாதிப்பைக் கொண்டிருந்தார். தனது அனுபவங்களை இயல்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
நடிப்புத் துறைக்கு அப்பால், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சம வாய்ப்புகள் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.
அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.