பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.
|
தமிழ்நாட்டில் பசு வதையை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பால் உற்பத்தி மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் 1976-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இந்த உத்தரவு பக்ரீத் பண்டிகைக்கு முன்பாக வெளியானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. |
|
சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் இந்த முக்கிய வழக்கை விசாரித்தனர். பக்ரீத் பண்டிகை அன்று (மே 28, 2026) உட்பட எந்த நாளிலும் தமிழ்நாட்டில் எங்கும் பசுக்களோ கன்றுகளோ வெட்டப்படக் கூடாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் (DGP) உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் கண்டிப்புடன் அமல்படுத்த கீழ்நிலை அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர். நீதிமன்றம் அளித்துள்ள இணக்க அறிக்கையை (Compliance Report) வரும் மே 29-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 2023-ஐ மேற்கோள் காட்டிய நீதிபதிகள், அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்கள் தவிர வேறு எந்த இடத்திலும் ஆடு, செம்மறியாடு உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனுமதிக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தினர். |