தங்கம் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 272 உயர்ந்து ரூ. 35,872க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் தங்கத்தின் விற்பனையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனால் அதன் விலையும் குறைந்தது. அரசின் அதிரடி நடவடிக்கையால் தொற்று படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.
இதனால் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு மீண்டும் தொழில் வளம் பெருகியுள்ளது. தங்கத்தின் விற்பனையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.
இந்நிலையில் சமீப நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 272 உயர்ந்தது.
இதையடுத்து ஒரு பவுன் ரூ. 35,872க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 34 உயர்ந்து, கிராம் ரூ. 4,484க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசு உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 67. 90க்கு விற்பனை செய்யப்படுகிறது.