இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் துப்பாக்கிசூடு!

13.08.2021 09:33:35

இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிசூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பிளைமவுத் நகரில் மர்ம நபர் ஒருவர் பொது மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

குண்டு பாய்ந்த பல பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்துக்குப் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதைப் பற்றிப் பேசுவதையோ, சமூக ஊடகங்களில் அதன் தொடர்பிலான படங்களைப் பகிர்ந்துகொள்வதையோ தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.மக்கள் அனைவரும் பதற்றப்படாமல், காவல்துறையின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, அவசரச் சேவைகள் பிரிவினர் தங்கள் வேலைகளைத் தொடர்ந்து செய்ய அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.