ஆங் சான் சூ ச்சீக்கு சிறைத்தண்டனை

27.04.2022 09:39:33

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மியான்மர் முன்னாள் தலைவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மியான்மரின் இராணுவத்தினர் கடந்த வருடம் பிப்ரவரி 2021 இல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சியை கொண்டு வந்தனர்.

அப்போதிருந்து, ஆங் சான் சூ ச்சீக்கு எதிராக பல வழக்குகள் நடத்தப்பட்டு வந்தன.

76 வயதான சூகி தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.