அடுத்த ஆண்டு முதல் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள கறுவாப்பட்டை
09.12.2023 09:00:00
அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து வருடாந்தம் இரண்டு பில்லியன் டொலர் பெறுமதியானகறுவாவை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக்க லிந்தர தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் கறுவாப்பட்டைக்கு சீன சந்தையில் அதிக கேள்வி நிலவுகின்றமையினாலேயே இந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபரின் சீன விஜயம்
இதேவேளை இந்த ஏற்றுமதியானது நாட்டின் கறுவா சந்தைக்கு பெரும் அனுகூலமாகும் என ஜனக்க லிந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் அதிபரின் சீன விஜயத்தின்போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.