சீனாவை எதிர்கொள்ள கூட்டிணைந்த வல்லரசு நாடுகள்
16.09.2021 12:00:30
சீனாவை எதிர்கொள்வதற்கு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டிணைந்துள்ளன.
பாதுகாப்பு தொழிநுட்பங்களை பகிர்வதற்காகவே குறித்த நாடுகள் உடன்படிக்கையொன்றின் மூலம் கூட்டிணைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் அவுஸ்திரேலியா முதன் முறையாக அனுசக்தி நீர் மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கு உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆக்கஸ் (Aukus) என்றழைக்கப்படும் இந்த உடன்படிக்கையில் செயற்கை நுண்ணறிவு, இணையவழி மற்றும் ஏனைய தொழிநுட்ப விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.