டசின் கணக்கானோரின் கடவுச்சீட்டுகளை ரத்து செய்த நாடு

13.10.2024 09:15:41

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மறு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டசின் கணக்கான பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் கடவுச்சீட்டை அந்த நாட்டின் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் மனித உரிமைக் குழுக்கள் கூறுவது, எதேச்சதிகார ஜனாதிபதியின் எதிரிகளுக்கு எதிரான அடக்குமுறையின் தீவிர நிலை இதுவென குறிப்பிட்டுள்ளனர்.

   

குறைந்தபட்சம் 40 பேர், பெரும்பாலும் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கடவுச்சீட்டுகள் எந்த விளக்கமும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவே மனித உரிமைக் குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் முக்கிய விமான நிலையத்திலிருந்து விமானங்களில் ஏற முற்பட்ட போது, ​​கடவுச்சீட்டுகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. கொலை அல்லது சித்திரவதையைப் போலல்லாமல்,

குறைந்த முயற்சியுடன் விமர்சனக் குரல்களை ஒடுக்குவதற்கும் முடக்குவதற்கும் கடவுச்சீட்டு ரத்து என்பது ஒரு சிறந்த வழியாகும் என்று அரசாங்கம் கண்டறிந்துள்ளது என்றே உள்ளூர் நாளேடு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மதுரோவின் விவாதத்துக்குரிய வெற்றியை எதிர்க்கட்சியினர் ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே, தொடர்புடைய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.