கவனயீர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலை முன்றலில்..

28.07.2021 09:58:44

கொத்தலவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக ஆசியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் காலை 11 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று புதன்கிழமை இணையவழிக் கற்பிப்பித்தலில் இருந்து விலக முடிவு செய்வதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.