18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

21.05.2024 08:05:06

ஒரே ஒரு மொபைலில் ஆயிரம் சிம்கார்டுகளை தொழில் நுட்பம் மூலம் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் மோசடியாக செயல்பட்டு வரும் 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க தொலைதொடர்பு துறை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மோசடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தவறாக பயன்படுத்தப்படும் மொபைல் இணைப்புகளை தொலைத்தொடர்பு துறை துண்டிக்க திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் ஆயிரக்கணக்கான சிம்கார்டுகளை ஒரே ஒரு மொபைலில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடிகள் நடைபெறுவது கண்டறியப்பட்டது. 

 

இதனை அடுத்து மோசடியான மொபைல் இணைப்புகளை துண்டிக்க உள்ளதாகவும் 20 லட்சத்திற்கும் அதிகமான இணைப்புகளை சரி பார்க்க தொலைபேசி தொடர்பு துறை தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. 

 

அந்த வகையில் இந்த சரிபார்ப்பு முடிந்தவுடன் சுமார் 18 லட்சம் சிம்கார்டுகள் முடக்கப்படும் என்றும் தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.