தாய்லாந்தில் இரவு நேர விடுதியில் தீ விபத்து

05.08.2022 10:46:01

தாய்லாந்தில் இரவுநேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 40பேர் படுகாயமடைந்தனர்.

பாங்காக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் (90 மைல்) தொலைவில் உள்ள சோன்புரி மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்ற இடத்தில் அதிகாலை 1:00 மணியளவில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த தீ விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது ஆண்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. வெளிநாட்டவர்களுடன் தொடர்புடைய இறப்பு பதிவாகவில்லை.

விடுதியின் சுவர்களில் எரியக்கூடிய படலம் காரணமாக தீ வேகமாக பரவியதாகவும், அதை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்களுக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆனது என்றும் அவர் மேலும் தெரிவித்தனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு பாங்காக்கின் ஸ்வான்கி சாந்திகா இரவு விடுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், 67 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேடையில் ‘பர்ன்’ என்று அழைக்கப்படும் ரொக் இசைக்குழு இசைக்கப்படும்போது பட்டாசு வெடித்தபோது தொடங்கிய தீயில், சாந்திகா உரிமையாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.