கணேசமூர்த்தி தற்கொலை செய்துக் கொண்டாரா?

28.03.2024 07:57:58

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி உயிரிழந்த நிலையில் அவர் எம்.பி சீட் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
 

 

மக்களவை தேர்தலில் திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில், அக்கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். கடந்த முறை மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு கணேசமூர்த்தி நின்று வெற்றி பெற்றிருந்தார்.
 

தற்போது எம்.பியாக இருந்த கணேசமூர்த்தி திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனக்கு எம்.பி சீட் கிடைக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கணேசமூர்த்தி தற்கொலை விவகாரம் குறித்து பேசிய வைகோ, எம்.பி சீட் கொடுக்காததால் தான் கணேசமூர்த்தி தற்கொலை செய்துக் கொண்டார் என பரவி வரும் தகவலில் துளியும் உண்மையில்லை என்றும், திமுக கூட்டணியில் ஒரு சீட் கிடைத்தால் அதில் துரை வைகோ போட்டியிடட்டும் என கணேசமூர்த்தியே என்னிடம் சொல்லியிருந்தார் என்றும் கூறியுள்ளார்.