'ரத்தம்' படத்தின் டீசர்
07.12.2022 09:26:44
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரத்தம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
'தமிழ்படம்' புகழ் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரத்தம்'. இந்த திரைப்படத்தில் மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் ஜெகன் கிருஷ்ணா, நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வெற்றிமாறன், பா.இரஞ்சித், வெங்கட் பிரபு ஆகிய 3 பேரும் சிறப்பு தோற்றத்தில் இடம் பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.