விபத்தில் தாயும் இரு மகள்களும் பலி

19.02.2024 16:02:00

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும்  இரு மகள்கள்  உயிரிழந்துள்ளதாக   தொிவிக்கப்பட்டுள்ளது

 

ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ உப நிலையங்களுக்கு இடையில்  இந்த விபத்து   ஏற்பட்டுள்ளதாக தொிவித்துள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.