இந்தியாவில் 156 மருந்துகளுக்கு தடை
25.08.2024 09:16:15
இந்தியாவில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 156 மருந்துகளுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த மருந்துகளின் பயன்பாடு மனித உடலுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி குறித்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் 328 மருந்துகளுக்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.