பொபி சிம்ஹா நடிக்கும் 'நான் வயலன்ஸ்'
பொபி சிம்ஹா- சிரிஷ்- யோகி பாபு ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'நான் வயலன்ஸ்' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நான் வயலன்ஸ்' எனும் திரைப்படத்தில் பொபி சிம்ஹா, சிரீஷ், யோகி பாபு, அதிதி பாலன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஏ கே பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருப்பதாகவும், இப்படம் இந்த ஆண்டில் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.