சமாதான பேச்சுக்கு இஸ்ரேல் இணக்கம்

31.03.2024 09:02:44

ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுடன் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது.

டோஹா மற்றும் கெய்ரோ நகரங்களில் இந்த கலந்துரையாடலை நடத்த இஸ்ரேல் பிரதமர் அனுமதி வழங்கியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கலந்துரையாடலில் கட்டார் மத்தியஸ்தம் வகிக்கின்றது.

காஸா எல்லையில் போர் நிறுத்தத்தை அறிவித்தல் மற்றும் பணயக் கைதிகளை விடுவித்தல் என்பன இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக உள்ளது