ஜேர்மன் குடிமக்கள் உடனடியாக வெளியேற வலியுறுத்தல் !

24.11.2021 10:00:00

எத்தியோப்பியா நாட்டிலிருக்கும் ஜேர்மன் குடிமக்கள், உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது.

எத்தியோப்பியா, உள்நாட்டு யுத்தம் ஒன்றை சந்தித்து வருகிறது. அந்நாட்டிலுள்ள திக்ரே மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பினர், அரசு படைகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

பல நகரங்களை அந்த அமைப்பினர் கைப்பற்றிவிட்ட நிலையில், அவர்கள், தலைநகர் அடிஸ் அபாபாவை நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே, ஜேர்மனி மட்டுமின்றி அமெரிக்கா முதலான பல நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன.

ஆனால், அடிஸ் அபாபாவின் பாதுகாப்பு அமைப்பான Addis Ababa Peace and Security Bureauவின் தலைவரான Kenea Yadeta, மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் தெரிவிப்பதுபோல அல்லாமல் நகரம் அமைதியாக இருப்பதாகவும், ஆகவே பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலர்கள் கவலைப்படவோ பயப்படவோ வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.