இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்.

06.10.2025 08:16:19

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான நாள் இறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தை தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் ஆகிய இரு மோதல் தரப்பும் இதற்கு ஆர்வம் காட்டியுள்ள நிலையில், திங்கட்கிழமை பிணைக் கைதிகள் விடுவிப்பு உட்பட போர் நிறுத்த தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கவுள்ளன.

இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் இணைந்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எகிப்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரண்டு தரப்புகளும் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளது.