ஷங்கர் மகள் திருமணம்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கர். இவர் ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், நண்பன். சிவாஜி, எந்திரன், 2.0 உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது கமல் நடிப்பில் இந்தியன்2 படத்தையும், ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் பிரமாண்டமாக நடக்கும் நிலையில் , இதற்காக கடந்தவாரம் ஷங்கர் மும்பை சென்று இந்தி நடிகர்களை சந்தித்து பத்திரிக்கை கொடுத்தார்.
அவருக்கு சினிமா வட்டாரத்தில் நண்பர்கள் அதிகம் என்பதால், எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுக்கும் வகையில், அவரால் பாய்ஸ் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பரத்திடம் அனைத்து நடிகர்களுக்கும் பத்திரிக்கை வழங்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். அதேபோல், இயக்குனர்களுக்கு அழைப்பிதழ் வழங்க லிங்குசாமியிடமும் நடிகைகளுக்கு அழைப்பிதழ் வழங்கும் பொறுப்பை இரண்டாவது மகள் அதிதியிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.