இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்!

16.07.2025 15:12:11

'சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்' எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் நிகழ்வு இன்று (16) புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய், அனைத்து தேசிய இனங்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் அமைப்பிற்காக போராடுவோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து எதிர்ப்பு பதாகையில் கையொப்பம் சேகரிக்கப்பட்டது.

இதன்போது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து கையொப்பத்தை பதிவு செய்தனர்.