கோட்டாபய நீதிமன்றில் ஆஜர்.

23.07.2026 15:16:13

தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரித் தாக்கல் செய்துள்ள ரீட் (Writ) மனு தொடர்பான விசாரணை நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

குறித்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலதிக பரிசீலனைக்காக இன்று எடுத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

இம்மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், கடந்த ஜூலை 9-ஆம் திகதி தொடர்ச்சியாக 4-ஆவது நாளாகவும் பரிசீலிக்கப்பட்டது. அதன்பின்னரே, மேலதிக விசாரணைகள் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தன.