கைதியை நிர்வாணமாக்கிய இன்ஸ்பெக்டர் பணி விலக்கல்

13.11.2021 09:43:08

பெண் கைதியை நிர்வாணமாக நடனம் ஆட வற்புறுத்திய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் குழந்தையை கொலை செய்த வழக்கில் பாரிகுல் என்ற பெண் கைது செய்யப்பட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டார்.பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத், கைதி பாரிகுல்லின் உடைகளை களைந்து அவரை நிர்வாணமாக்கினார்.

மேலும் ஸ்டேஷனில் அனைவருக்கும் முன் நிர்வாணமாக நடனம் ஆடச்சொல்லி வற்புறுத்தியுள்ளார்.இதுகுறித்து விசாரணை நடத்திய குவெட்டா நகர டி.எஸ்.பி., முகமது அஸார், பெண் இன்ஸ்பெக்டர் ஷபானாவை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.