மின் கட்டண திருத்த யோசனை இன்று ஆணைக்குழுவிடம்

22.02.2024 07:43:36

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இன்று (22) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபையால் ஈட்டப்படும் இலாபத்தை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இது தொடர்பான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படுவதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண திருத்தத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணம், இந்த புதிய கட்டண திருத்தத்தில் முற்றாக நீக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.