இளையராஜா பயோபிக்கில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி & கமல்
27.02.2024 08:00:00
தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர் இளையராஜா. 1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் இதுவரை 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்திய அளவில் ஏன் உலக அளவிலேயே அதிகபடங்களுக்கு இசையமைத்தவராக சாதனை படைத்துள்ள இளையராஜாவின் பயோபிக் தற்போது உருவாக உள்ளது. இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இயக்குனர் பால்கி வெளியேறி விட்டதாகவும், அவருக்கு பதில் சில இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் மர்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.